பண மதிப்பிழப்பு திட்டத்தினால் ஏற்பட்ட பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 29/12/2016


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் அனைத்து தரப்பு மக்களும் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கொடுக்கப்பட்ட கால அவகாசமும் டிசம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதுமட்டுமல்லாமல், ‘எல்லாம் சரியாகி விடும். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என பிரதமர் கேட்ட அவகாசமும் முடிந்துவிட்டது. 
ஆயினும், எதுவும் சரியாகவுமில்லை, மக்கள் படும் சிரமங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அண்டை மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு மக்களின் சிரமங்களை கண்டுகொண்டதாக தெரியவில்லை. அதேநேரம், இந்திய பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, நாட்டு வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் அபாயக் கோட்டில் நிற்கிறது என பிரபல பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். 
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், “இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், வங்கி செயல்பாடுகளை சீர் செய்ய செய்ய உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தால் பொருளாதாரத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது, எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். 


Share this News: