தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை பிரதமர் விரைவுபடுத்த வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 31/12/2016


தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை சொந்தமாக்கிக் கொள்வோம் என்ற இலங்கை அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை 119 படகுகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளதாகவும், 51 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக முதல்வர், பிரதமருக்கு கடந்த 21.12.2016 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். 


Share this News: