அனைவருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து



சென்னை | 01/01/2017


தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆங்கிலப் புத்தாண்டான 2017, தமிழக மக்களுக்கு அனைத்து வகையிலும் முன்னேற்றம் தரும் ஆண்டாக, அத்தகைய ஊக்கமும், உற்சாகமும் அளிக்கின்ற ஆண்டாகப் பிறக்கிறது என்றே எண்ணுகிறேன். கடந்த ஆண்டில் நடந்த இன்னல்கள் மறைந்து, இன்பம் பிறக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையும். மாநிலமும், நாடும் வளர்ச்சி பெற்று "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்" நடைபோட உங்களில் ஒருவனாக முன்னிற்பேன் என உறுதி கூறி, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார். 


Share this News: