தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 07/01/2017


இந்தியாவிலேயே முதன்முறையாக தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்போதைய அதிமுக ஆட்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. விவசாயிகள் நலனுக்காக பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் இந்தப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதையும், இதன் நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டு இப்பல்கலைக்கழக ஊழியர்களும், விஞ்ஞானிகளும், மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். 50 அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் இருந்தும், இப்படியொரு அசாதாரண நிலை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு உருவாகியிருப்பது கவலைக்குரியது. ஆனால் முதல்வரோ, அதிமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரோ இதுகுறித்து கண்டுகொள்ளவேயில்லை.  
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், “இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை உடனடியாகக் களைந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள், நிர்வாக குளறுபடிகள் போன்றவை குறித்து விசாரணை செய்ய சிறந்த கல்வியாளர்கள் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அறிக்கை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 


Share this News: