ஜல்லிக்கட்டை காக்க மெரினாவில் கடலெனக் கூடியோருக்கு வாழ்த்துகள் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 08/01/2017


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கோரி சென்னை மெரினாவில் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. முகநூல் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு கலங்கரை விளக்கம் அருகிலிருந்து தொடங்கிய இந்த பேரணி, உழைப்பாளர் சிலை அருகே காலை 9 மணிக்கு முடிவடைந்தது. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், "தமிழர் பண்பாட்டு அடையாளமான வீர விளையாட்டைக் காக்க மெரினாவில் கடலெனக் கூடியோருக்கு வாழ்த்துகள்" என்றார்.


Share this News: