ஊக்கம் தரும் வாழ்த்துகளை உரமாக்கிக் கொள்கிறேன் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 09/01/2017


தளபதி மு.க.ஸ்டாலின் திமுக-வின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற நாள் முதல், தினத்தோறும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. வாழ்த்து கூறிய அனைவருக்கும், ‘ஊக்கம் தரும் வாழ்த்துகளை உரமாக்கிக் கொள்கிறேன்’ என்று தலைப்பிட்டு தளபதி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “எந்த நம்பிக்கையுடன் அனைவரும் வாழ்த்துகிறார்களோ அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் சீரிய தருணமாக இது அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார். மேலும், “களத்தில் விளையவிருக்கும் செயல்பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள். இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன்.” எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


Share this News: